என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நியூயார்க் டைம்ஸ்
நீங்கள் தேடியது "நியூயார்க் டைம்ஸ்"
டிரம்பின் மோசமான நிர்வாகத்தில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. #DonaldTrump #NewyorkTimes
நியூயார்க்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் வெளியுறவு கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார் டைம்ஸ் இதழில் இது சம்பந்தமாக தலையங்க கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையில் டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். அதில், டிரம்பின் இரக்கமற்ற தன்மை, வெளிநாட்டு விஷயங்களில் தெளிவில்லாமல் எடுக்கும் மோசமான நடவடிக்கைகள், பொருளாதார பிரச்சனைகள் ஆகியவற்றில் டிரம்ப் எடுக்கும் முடிவுகள் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த கட்டுரையை எழுதி இருப்பவர் தனது பெயரை குறிப்பிடவில்லை. இது அவர் தைரியம் இல்லாதவர் என்பதை காட்டுகிறது. இந்த செய்தி போலியானது என்று கூறியிருக்கிறார்.
மேலும், டிரம்பின் செய்தி தொடர்பாக இதுபற்றி கூறும்போது, கட்டுரையை வெளியிட்ட நிர்வாகி டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த கட்டுரை மிக சரியானது, இதை வெளியிட்டதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளது. #DonaldTrump #NewyorkTimes
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் வெளியுறவு கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார் டைம்ஸ் இதழில் இது சம்பந்தமாக தலையங்க கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையில் டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். அதில், டிரம்பின் இரக்கமற்ற தன்மை, வெளிநாட்டு விஷயங்களில் தெளிவில்லாமல் எடுக்கும் மோசமான நடவடிக்கைகள், பொருளாதார பிரச்சனைகள் ஆகியவற்றில் டிரம்ப் எடுக்கும் முடிவுகள் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அமெரிக்காவின் மூத்த நிர்வாகிகள் டிரம்பின் நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், டிரம்பின் செய்தி தொடர்பாக இதுபற்றி கூறும்போது, கட்டுரையை வெளியிட்ட நிர்வாகி டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த கட்டுரை மிக சரியானது, இதை வெளியிட்டதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளது. #DonaldTrump #NewyorkTimes
×

X